சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஒரு முன்னணி நட்சத்திரத்தின் திரைப்படம் வெளியாகிறது என்றால் எப்படி இருக்க வேண்டும். தியேட்டர்கள் அப்படியே பரபரக்க வேண்டாமா ?. ஆனால், அப்படி எதுவுமில்லாமல் எந்த பரபரப்போ, ஆர்பாட்டமோ இல்லாமல் மிகவும் அமைதியாக வெளியாகியிருக்கிறது கமல்ஹாசன் நடித்துள்ள பாபநாசம். இந்தப் படம் வழக்கமான ஆக்ஷன் படமோ, அல்லது பரபரப்பை ஏற்படுத்தும் படமோ அல்ல. ஒரு அழகான குடும்பக் கதை, அதனால் இந்தப் படத்திற்கு வழக்கமாக ரசிகர்கள் செய்யும் எந்த விதமான அமர்க்களமான ஆடம்பரமான பரபரப்பு எதுவும் தேவையில்லை என கமல்ஹாசன் சொன்னதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு புதுமுகத்தின் படம் வெளிவருவது போலத்தான் பாபநாசம் இன்று தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. ஒரு சில ரசிகர்கள் மட்டுமே ஏதோ பெயருக்கு நாங்களும் ஃபிளக்ஸ் வைக்கிறோம் என வாழ்த்துச் சொல்லி வைத்திருக்கிறார்கள். பொதுவாக கமல்ஹாசன் படம் என்றாலே ஏதாவது சர்ச்சையுடன் தான் வெளிவரும். அதுவே அந்தப் படத்திற்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். இந்தப் படத்திற்கும் சில காமெடி பீஸ்கள் பிரச்சனை ஏற்படுத்த முயன்றிருக்கின்றன. அதை கமல்ஹாசன் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விட்டார். அதனால், அந்த தேவையற்ற சர்ச்சையும் தவிர்க்கப்பட்டுவிட்டது.
இதனிடையே, இன்று வெளியான படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்கள் கழித்து குடும்பத்தினருடன் வந்து பார்க்கும்படியான கமல்ஹாசன் படமாக பாபநாசம் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.