'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்தியில் சூப்பர் ஹிட்டான "த்ரீ இடியட்ஸ்" படம் தமிழில் எடுக்கப்படுகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் டைரக்ட் செய்கிறார். படத்திற்கு தலைப்பு வைக்க நிறைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் "நண்பன்" என்று பெயர் வைத்துள்ளார் ஷங்கர்.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகிய மூவர் கூட்டணியில், ஷங்கர் இயக்கும் இப்படத்தை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிக்கிறது. விஜய் ஜோடியாக ஆந்திராவின் முன்னணி நடிகை இலியானா நடிக்கிறார். இவர்கள் தவிர நடிகரும், டைக்டருமான எஸ்.ஜே.சூர்யா, சத்யன், அஜய் ரத்னம், அனுயா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. பிப்.25ம் தேதி முதல் நடிகர் விஜய் சூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.