Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிரடி சண்டைக் காட்சிகளுடன் உருவாகும் சிவம்

23 ஜூன், 2015 - 12:06 IST
எழுத்தின் அளவு:
Sivam-full-of-action

தெலுங்கு நடிகர் ராம் தற்போது நடித்து வரும் சிவம் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீநிவாச ரெட்டி இயக்கி வருகின்றார். இப்படத்தில் ராமிற்கு ஜோடியாக நேகா சர்மா மற்றும் ரக்ஷி கண்ணா என இரு நடிகைகள் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த படக்குழு பின்னர் ஊட்டியில் படப்பிடிப்பை நடத்தினர். இப்படத்தின் தயாரிப்பாளர் ரவி கிஷோர் படம் குறித்து கூறுகையில், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியிலும் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இப்படத்தின் 70%படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுள்ளன. இப்படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது இருப்பினும் மாஸ் மற்றும் கிளாஸ் ரசிகர்களுக்கு இப்படம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்று கூறியுள்ளார். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதால் சிவம் படம் செப்டம்பரில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)