சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'காதல் கோட்டை' படத்தை இயக்கிய அகத்தியனின் மகளான விஜயலட்சுமி 'சென்னை 28' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்து அவர் நடித்த 'அஞ்சாதே' படம் மட்டுமே அவருக்கு குறிப்பிட்டுச் சொல்லும் படமாக அமைந்த்து. தொடர்ந்து அவர் நடித்த “அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம், ஆடாம ஜெயிச்சோமடா, வெண்ணிலா வீடு” போன்ற படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன. அவர் நாயகியாக நடித்த 'ரெண்டாவது படம்' இன்னும் வெளிவராமலே உள்ளது. இதனிடையே தன்னுடைய வருங்கால காதல் கணவருக்காக தயாரிப்பாளராக மாறியிருக்கிறார் விஜயலட்சுமி.
உதவி இயக்குனராக இருந்த ஃபெரோஸ் என்பவரைக் காதலித்த விஜயலட்சுமி, அவரை இயக்குனராக அறிமுகப்படுத்த தானே சொந்தமாக ஒரு படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கிருஷ்ணா, 'கயல்' ஆனந்தி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். 'பண்டிகை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. ரொமான்ஸ், நகைச்சுவைப் படமாக இந்தப் படம் உருவாக உள்ளது.