அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
தெலுங்கில் சுமார் 50க்கும் மேறற்பட்ட படங்களை இயக்கியவர் ரவிராஜா பினிஷெட்டி. முன்னணி ஹீரோக்கள் அனைவரையும் இயக்கிய இவர் 90களில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். அவரது மகன்தான் நடிகர் ஆதி. பி.இ.படித்துவிட்டு பைலட் ஆக ஆசைப்பட்ட ஆதி, 2006 ஒக வி சித்ரம் என்ற தெலுங்குப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்த அண்டே மிருகம் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். ஈரம் உட்பட பல தமிழ்ப்படங்களில் நடித்தும் ஆதிக்கு பிரேக் கிடைக்கவில்லை. எனவே 'யாகாவாராயினும் நா காக்க' என்ற படத்தை தானே தயாரித்து, நடித்து வருகிறார்.
ஆதி உடன் பசுபதி, நிக்கி கல்ராணி முதலானோர் நடித்துள்ள இப்படத்தை சத்யபிரபாஸ் இயக்கியிருக்கிறார். 'யாகாவாராயினும் நா காக்க' படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மிதுன் சக்ரவர்த்தியும் நடித்திருக்கிறார். தமிழில் முதன் முதலாக நடிக்கும் மிதுன் சக்ரவர்த்தி இப்படத்தில் தாதா வேடமேற்றிருக்கிறார். இப்படத்திற்கு பிரசன் பிரவீன் ஷ்யாம் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஷண்முக சுந்தரம் கவனித்துள்ளார்.
'யாகாவாராயினும் நா காக்க' படத்தின் டிரைலர் இன்று காலை 10 மணிக்கு யூடியூபில் வெளியாகி உள்ளது. இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்தவிழாவில் மிதுன்சக்கரவர்த்தியும் கலந்து கொள்கிறார்.