சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த சில ஆண்டுகளாகவே சிம்பு நடித்த படங்களே தியேட்டர்களுக்கு வருவதில்லை. அப்படி தான் நடித்த படங்களை தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் அவதிப்படுவதால் தனது தந்தை மூலமாக வாலு படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கினார் சிம்பு. ஆனால், அதுவும் இதோ அதோ என்ற தற்போது இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. சிலமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டும் இப்போது அதுபற்றிய பேச்சே இல்லை. இதனால் சிம்பு படம் என்றாலே இப்படித்தான் ஒரு தேதியை சொல்வார்கள். பின்னர் காலவரையறை இன்றி ஒத்தி வைத்து விடுவார்கள் என்பது போலாகி விட்டது.
இந்த நிலையில், சமீபகாலமாக பத்திரிகைகளை சந்திப்பதை தவிர்த்து வந்த சிம்பு, இன்று மாலை 5 மணி அளவில் பிரஸ்மீட் வைத்து மீடியாக்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதற்கான அறிவிப்புகளும் பிஆர்ஓ மூலம் மீடியாக்களுக்கு நேற்றே தெரிவிக்கப்பட்டது. ஆனால், என்ன காரணமோ இன்று மதியம் 2.30 அளவில் சிம்பு பிரஸ்மீட்டை சிம்பு கேன்சல் செய்து விட்டதாக தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆக, சிம்பு நடித்த படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கேன்சல் செய்யப்படுவது போன்ற இப்போது அவரது பிரஸ்மீட்டும் கேன்சல் செய்யப்பட்டிருப்பதாக மீடியா நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்.