சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
டோலிவுடின் பிரின்சஸ் மகேஷ் பாபு தற்போது ஸ்ரீமந்துடு படத்தில் நடித்து வருகின்றார்.மிர்ச்சி புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு பிரமோற்சவம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மே மாத இறுதியில் துவங்கும், என அறிவிக்கப்பட்ட இப்படம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நடிகர் மகேஷ் பாபுவும் இணைந்து தயாரிக்கின்றார்.தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் ஜூலை 10 ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.ஜூனியர் என்.டி.ஆர், ரவி தேஜா உள்ளிட்ட டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேந்து நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது பிரின்சஸ் மகேஷ் பாபுவுடனும் ஜோடி சேரவுள்ளார். இப்படத்தினை அடுத்த வருடம் சங்கராந்தி பண்டிகை அன்று வெளியிட இயக்குநர் ஸ்ரீகாந்த் திட்டமிட்டுள்ளார்.