சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகை லட்சுமி மேனன் பிளஸ் 2 தேர்வில் 72 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பாஸாகிவிட்டார். கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானாவர் நடிகை லட்சுமி மேனன். 9 வது படிக்கும்போதே ஹீரோயினாக நடித்த லட்சுமி மேனன், தொடர்ந்து சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, மஞ்சப்பை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துவிட்டார். கடைசியாக தமிழில் அவர் நடித்த கொம்பன் படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்தது.
லட்சுமி மேனன், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினார். இதனால் கொம்பன் படத்தை முடித்த கையோடு சினிமாவுக்கு கொஞ்ச காலம் பிரேக் விட்டு, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டி புத்தகமும் கையுமாக அழைந்தார். லட்சுமி மேனன் பிளஸ் 2வில், சிபிஎஸ்இ., பாடப்பரிவில், வணிகவியல் குரூப் எடுத்திருந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் தேர்வு எழுதிய லட்சுமி மேனனுக்கு இன்று தேர்வு முடிவுகள் வௌியாகின. அதில் லட்சுமி மேனன் 72 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பாஸாகியுள்ளார். இந்த தகவலை லட்சுமி மேனனின் அம்மா நம்மோடு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். தொடர்ந்து லட்சுமி மேனன் மேற்படிப்பு படிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த இருவாரங்களுக்கு முன்னர் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வௌியானபோத லட்சுமி மேனன், பெயிலாகிவிட்டதாக தகவல் பரவியது, பின்னர் அந்த செய்தி தவறானது என்பது பின்னர் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.