சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
எங்கிருந்துதான் இப்படிப்பட்ட வீடியோக்கள் வருகிறதோ, அல்லது சிலர் வேண்டுமென்றே செய்கிறார்களா என கண்டிக்க வேண்டிய விஷயமாக ஆபாச வீடியோக்களை வெளியிடுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் சமீபத்திய வெளியீடாக 'விஸ்வரூபம், உத்தம வில்லன்' படங்களின் நாயகி பூஜா குமாரின் ஆபாச வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ வைரலாகப் பரவி வருவதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசி வருகிறார்கள்.
பூஜா குமார் திரைப்படங்களிலும் கொஞ்சம் கிளாமராகவே நடிப்பவர்தான், அதற்காக தொடர்ச்சியாக இப்படி நடிகைகளின் ஆபாச வீடியோக்களை சிலர் வழக்கமாக வெளியிடுவதைத் தடுக்க வேண்டும் என பெயர் சொல்ல விரும்பாத நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். இன்றைக்கிருக்கும் மொபைல் யுகத்தில் எங்கிருந்தோ, எப்படியோ இது மாதிரியான வீடியோக்கள் 'லீக்' ஆகி வருகின்றன.
இதற்கு முன்னர், “அனுஷ்கா, லட்சுமி மேனன், ராதிகா ஆப்தே, ஹன்சிகா” ஆகியோரின் வீடியோக்கள் எனச் சொல்லி சிலவற்றை பரப்பினார்கள். அதற்கு அந்த நடிகைகள் எந்த வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இம்மாதிரியான வீடியோக்கள் பரவுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும், நடிகர் சங்கம் இதில் தலையிட வேண்டும் என்றும் திரையுலகத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.