சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஸ்வரூபம் படத்தை அடுத்து இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் நாளை உலகம் முழுவதும் உலக நாயகன் நடிகர் கமலஹசனின் நடிப்பில் மாறுபட்ட கதைக் களத்தில் உருவாகியிருக்கும் உத்தம வில்லன் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வருகின்றது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக கமலே தெலுங்கில் சொந்த குரலில் பின்னணி பேசியுள்ளார். கமல் நேரடி தெலுங்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். தெலுங்கு ரசிகர்களினைக் கவரும் வகையில் அரசியல் பின்னணி இல்லாத வகையில் தெலுங்கு படத்தில் விரைவில் நடிக்கவுள்ளதாகவும் கமல் தெரிவித்துள்ளார். நடிகர் கமல் தெலுங்கில் ஏற்கனவே மரோ சரித்ரா, சகாரா சங்கமம், சுப சங்கல்பம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அந்த வரிசையில் விரைவில் கமலின் தெலுங்கு வெற்றி படம் ஒன்று உருவாகவுள்ளது.