சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அட்டகத்தி படத்தில் தினேஷை நடிக்க வைத்த டைரக்டர் ரஞ்சித், அதையடுத்து இயக்கிய மெட்ராஸ் படத்தில் கார்த்தி ஹீரோ என்றாலும், அவருக்கு இணையான இன்னொரு வேடத்தில் அன்பு என்ற கேரக்டரில் கலையரசனை நடிக்க வைத்தார். அதற்கு முன்பே சில படங்களில் அவர் நடித்திருந்தபோதும் இந்த படத்தில்தான் வெளியில் தெரியும் அளவுக்கு வெயிட்டான ரோலில் நடித்தார் கலையரசன்.
அந்த மெட்ராஸ் படம் வெளியான நேரத்தில் கார்த்தி-கேத்ரின் தெரசா ஜோடியாக நடித்தபோதும், கலையரசன்- ரித்விகா ஜோடியே பெரிதாக பேசப்பட்டது. அதனால், அதையடுத்து ஷோலோ ஹீரோவாக பல படங்களில் கமிட்டாகி விட்டார் கலையரசன்.
அந்த வகையில், உருமீன், ஜின், ராஜா மந்திரி உள்பட பல படங்களில் கமிட்டாகி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக, சிவகார்த்திகேயன்,விஜயசேதுபதி, தினேஷ் போன்ற ஹீரோக்களின் கால்சீட் கிடைக்காத இயக்குனர்கள் அடுத்தபடியாக கலையரசனைத்தான் நாடிச்சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும், தற்போது 8 படங்களை தயாரித்துக்கொண்டிருக்கும் பிவிபி நிறுவனமும் தங்களது ஒரு படத்துக்கு கலையரசனை தற்போது புக் பண்ணியிருக்கிறது.