அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
சலீம் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் படம், ''இந்தியா பாகிஸ்தான்''. என்.ஆனந்த் இயக்குகிறார், தீனா தேவராஜன் இசை அமைக்கிறார். ஓம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு பார்வை...
இதற்கு முந்தைய படங்களில் அதிகம் பேசாமல் நடித்தார் விஜய் ஆண்டனி. இந்தப்படம் அவர் நிறைய பேசும் காமெடி படம் என்பதால் "பார்க்க ரொம்ப பழமா இருக்க சத்தமா பேசுவியா?" என்று நண்டு ஜெகன் கேட்க "பேசுவேன்" என்று விஜய் ஆண்டனி பதில் அளிப்பதோடு டிரைலர் தொடங்குகிறது.
"மார்க்கெட்டுல மீன் விற்கிறவன் மாதிரி இருக்க. உன்னை மார்க்கெட்டிங் மானேஜர்னு சொல்லும்போதே நான் உஷாராயிருக்கணும்" என்று ஹீரோயின் சுஷ்மா ராஜ் சொல்ல, "உன்னை சாப்ட்வேர் என்ஜினீயர் சொல்லும்போது நான் உஷாயிருக்கணும்" என்கிறார் விஜய் ஆண்டனி. ஆக பொருத்தமில்லாத இருவருக்கு திருமணம் நடந்து விட அதனால் அவர்களுக்குள் வரும் ஈகோ பிரச்சினையை காமெடியாக சொல்லப்போகிற படம் என்பது தெளிவாகிறது. இதில் ஒருவர் இந்தியா, இன்னொருவர் பாகிஸ்தான்.
கேரக்டர் பெயர்கள் அறிமுகப்படுத்துப்படுகிறது. அட்டம்ட் கார்த்திக் (விஜய் ஆண்டனி), மெரிட் மெல்லினா (சுஷ்மாராஜ்), காட்டுப்பய காத்தமுத்து (பசுபதி), சாமிபுள்ள மருது (எம்.எஸ்.பாஸ்கர்), தாஸ் என்கிற பாவாடை (ஜெகன்).
படத்தில் டாஸ்மாக் காட்சிகள் நிறைய இருக்கிறது. இரண்டு நிமிட டிரைலரிலேயே இரண்டு காட்சிகள் வருகிறது. அதில் ஒரு காட்சியில் "சொந்த காசுல எப்போ குடிப்ப?" என்று ஜெகன் கேட்கிறார். "சொந்த காசுல குடிச்சு பழகிட்டா எப்பல்லாம் கையில காசிருக்கோ அப்பல்லாம் குடிக்க தோணும்" என்று விளக்கம் கொடுக்கிறார் விஜய் ஆண்டனி.
இதுதவிர பொள்ளாச்சி பசுமை பேக்டிராப்பில் ஒரு பாடல் காட்சி, ஸ்டைலிஷாக படமாக்கப்பட்ட வெளிநாட்டு பாடல் காட்சி. கிராபிக்சில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் போல விஜய் ஆண்டனி நடந்து வரும் காட்சி போன்றவையும் இடம் பெற்றுள்ளது. கலகலப்பான காமெடி படம் என்பதை டிரைலர் உணர்த்துகிறது.