சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
2013ல் மலையாளத்தில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பிய படம் தான் 'ரோமன்ஸ்'. குஞ்சாக்கோ போபனும் பிஜுமேனனும் இணைந்து நடித்த இந்தப்படம் இரண்டு திருடர்கள், கிறிஸ்துவ பாதிரியார்களாக வேஷம் போட்டுக்கொள்வதும், அதில் ஒருவர் காதல் வலையில் விழுவதும் என படம் முழுக்க கலாட்டாவாக இருந்தாலும், கிறிஸ்துவ தலைவர்களிடம் சர்ச்சைகளை கிளப்பவும் தவறவில்லை.
போபன் சாமுவேல் என்பவர் இந்தப்படத்தை இயக்கிருந்தார். அதன்பின் ஜெயசூர்யாவை வைத்து ஜனப்ரியன், ஹேப்பி ஜர்னி ஆகிய படங்களை இயக்கிய போபன் சாமுவேல், தற்போது தான் இயக்கவுள்ள படத்திற்கு ஜெயராமை கதாநாயகனாக கூட்டணி சேர்த்திருக்கிறார். காமெடி படமாக உருவாகவுள்ள இந்தப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக லட்சுமிராய் நடிக்கவுள்ளார். ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது.