சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கல்யாணம் ஆகப் போகும் ராசியோ என்னவோ, த்ரிஷாவுக்கு புதுப்பட வாய்ப்புகளாக குவிகிறது. இரு ஆண்டுகளாக, பெயர் சொல்லும் அளவுக்கு படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் தான்,கல்யாணம் முடித்து விட்டு,நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருந்தார். நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது. கல்யாணத்துக்கு தயாராகி வந்த அவருக்கு, இப்போது வாய்ப்புகள் அதிகமாக வந்துள்ளன. செல்வராகவன் நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கப் போகும் புதிய படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறாராம். இதனால், 'விண்ணைதாண்டி வருவாயா' படத்தை போலவே, இந்த படமும் ஹிட்டாகும் என, கனவில் மிதக்கிறார் த்ரிஷா.