சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மாமதுரை, அய்யன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் வாசன் கார்த்திக். காமெடி நடிகர் சிங்கமுத்துவின் மகனான இவர், அந்த படங்களில் ஆக்சன் ஹீரோவாக நடித்திருந்தார். அதனால் மாதக்கணக்கில் ஜிம்மே கதியென்று கிடந்து தனது உடம்பை கட்டுமஸ்தாக மாற்றிக்கொண்டு நடித்தார்.
முக்கியமாக காமெடி நடிகரின் மகன் என்கிற இமேஜ் விழுந்து விடக்கூடாது என்பதற்காக காமெடி காட்சிகளை தவிர்த்து நடித்தார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே அவருக்கு ஹிட்டாக அமையவில்லை. அதனால் அதையடுத்து வில்லன் வேடங்களில் நடிக்க வாசன் கார்த்திக்கிற்கு சில டைரக்டர்கள் அழைப்பு விடுத்தனர்.
ஆனால், அதற்கு ஒத்துக்கொண்டால், பின்னர் ஹீரோவாக நடிக்க முடியாது என்பதால் மறுத்த அவர், தற்போது மீண்டும் ஹீரோவாக நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். மகனுக்காக சில நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சிங்கமுத்து, சில டைரக்டர்களிடமும் கதைகள் கேட்டு வருகிறார்.