சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இவரிடம் உதவி இயக்குனராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் ராஜீவ் பிரசாத். இவர் தற்போது பத்து ஆண்டுகள் முயற்சிக்கு பின்பு படம் இயக்குகிறார். படத்துக்கு சதுரன் என்று பெயர் வைத்துள்ளார். திகில் படம் என்பதால் இரவு நேரங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடக்கிறதாம். புதுமுகம் ராஜா - வர்ஷா ஜோடியாக நடிக்கிறார்கள். பேய் கதைகளுக்கு கோலிவுட்டில் மவுசு இருப்பதை உணர்ந்து இப்போது வரும் இளம் இயக்குனர்களும் தங்கள் ரூட்டை இப்படி பேய் பக்கம் திருப்புகிறார்கள். சென்னையில் மட்டுமே படப்பிடிப்பு நடக்கிறது. 25 நாளில் படபிடிப்பை முடித்து மற்ற கிராபிக்ஸ் மூலம் பயமுறுத்தலாம் என திட்டம் வைத்து படப்பிடிப்பை தொடங்க உள்ளாராம் இயக்குனர்.