Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் ஆக ஆசைப்படும் விஷால்!

05 மார், 2015 - 04:07 IST
எழுத்தின் அளவு:
Is-Vishal-likes-to-change-as-Ajith

அஜித் நடிக்கும் படங்களுக்கு முன்கூட்டியே தலைப்பு வைப்பதில்லை. படப்பிடிப்பு முடிவடையும்போதுதான் தலைப்பை அறிவிக்கின்றனர். அதுவரை ரசிகர்கள் அஜித்தின் எத்தனையாவது படம் என்பதைக் குறிக்கும் வகையில் தல 55, தல56 என்று குறிப்பிடுகின்றனர். ஊடகங்களும் அவ்வாறே எழுதுகின்றன. இதேபோல் தான் நடிக்கும் படத்தையும் ரசிகர்களும், ஊடகங்களும் குறிப்பிட வேண்டும் என்று விஷாலுக்கு விருப்பம் போலிருக்கிறது.


சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு காவல் கோட்டம், வேட்டை மன்னன் என இரண்டு தலைப்பைகளை தேர்வு செய்து வைத்துள்ளனர். இரண்டில் எதை இறுதி செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பாண்டிய நாடு படத்திற்கு பிறகு விஷாலும், சுசீந்திரனும் இணைந்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை மதி கவனிக்க, டி.இமான் இசை அமைக்கிறார்.


இந்நிலையில் பெயரிடப்படாத அந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை சேத்துபட்டில் உள்ள செந்தூரப்பூவே பங்களாவில் துவங்கி நடந்து வருகிறது. இப்படம் குறித்த செய்தியை ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளனர். அதில் படத்தின் பெயராக விஷால் 19 என்று குறிப்பிட்டுள்ளனர்.


அஜித் ஆக ஆசைப்படுகிறாரா விஷால்!?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)