சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலாவின் பரதேசி படத்துக்கு பிறகு அதர்வாவின் சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்,. ஆனால் அதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், அதற்கடுத்து அவர் நடித்து வெளியான படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால் ஏறிய வேகத்திலேயே அவரது மார்க்கெட் இறங்கியது.
அதனால், இரும்புக்குதிரை படத்தையடுத்து ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து அதர்வா நடித்து வந்த ஈட்டி படம் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகாமல் திரைக்கு வராமல் நின்று கொண்டிருக்கிறது. அதேபோல், கணிதன் படமும் எப்போதோ முடிவடைந்தபோதும் வெளியாவதில் தாமதமாகி வருகிறது.
இந்த நிலையில், அதர்வாவை வைத்து சண்டிவீரன் படத்தை இயக்கியுள்ள களவாணி சற்குணம் மட்டும் படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் முனைப்பு காட்டி வருகிறார். அந்த படத்தை தயாரித்திருப்பது டைரக்டர் பாலா என்பதால், அப்படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதனால் இந்த பரபரப்பை வைத்து அதர்வாவின் ஈட்டி, கணிதன் படங்களும் அடுத்தடுத்து வெளியாக தயாராகிக்கொண்டிருக்கிறது.
ஆக, பரதேசி படத்தில் அதர்வாவை நடிக்க வைத்து அவருக்கு திருப்புமுனை கொடுத்த டைரக்டர் பாலாவே, தற்போது அவரை வைத்து சண்டிவீரன் படத்தை தயாரித்தும வீழ்ந்து கிடக்கும் அவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.