சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவிலும் பல படங்கள் ரிலீசாகமலே பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்றன, இதில் சில படங்கள் மட்டுமே தப்பித்துக் கொண்டு ரிலீசுக்கு திரையரங்கு வருகிறது, இந்த வரிசையில் தற்போது பெட்டிக்குள் தூங்காமல் திரைக்கு வரவிருக்கிறது “ரெ” திரைப்படம்.
வளர்ந்து வரும் நாயகனான சாய் தரம் தேஜ் நடிப்பில் இயக்குநர் YVS சௌத்ரி இயக்கி, தயாரித்திருக்கும் இந்த படம் நீண்ட் நாட்களுக்கு முன்னரே ரிலீசாக வேண்டியது, ஆனால் சில காரணங்களால் இந்த ரிலீஸ் தள்ளிக் கொண்டே போக கடைசியாக படத்தை பற்றின ஒரு செய்தி கூட இல்லாமல் காணாமல் போக வைத்துவிட்டனர், ஆனால் தற்போது மீண்டும் அதனை உயிர்பித்து ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டார் YVS சௌத்ரி. மார்ச் 27 ஆம் தேதி படத்தை உலகம் முழுவதும் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.
ரெ படத்தில் சாய் தரம் தேஜ்க்கு ஜோடியாக சய்யாமி கர் மற்றும் ஸ்ரதா தாஸ் என இரண்டு நாயகிகள் நடித்துள்ளார்கள், படத்திற்கு இசையமைத்துள்ளார் சக்ரி.