சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இயக்குனர் கவுதம் மேனன் திரைப்படங்களை நேரேட் செய்வதற்கு பின்னணி குரல் கொடுப்பார். அவரது படங்களுக்கு மட்டுமல்லாது மற்ற படங்களுக்கும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் ஒரு பாடகரும்கூட என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. விண்ணைத் தாண்டி வருவாயா பாடல் வெளியீட்டு விழாவிலும், இன்னும் சில விழாக்களிலும் பாடியிருக்கிறார். தற்போது முதன் முறையாக திரைப்படத்திலும் பாடியிருக்கிறார்.
கவுதம் மேனனின் நண்பரான ராதாமோகன் இயக்கி வரும் உப்புகருவாடு படத்தில், கவுதம் மேனன் பாடியிருக்கிறார். படத்திற்கு இசை அமைக்கும் ஸ்டீவும், கவுதமனின் நண்பர்தான். வாழ்க்கையை கொண்டாடும்விதமான ஒரு ஜாலியான பாட்டு படத்தில் வருகிறது. இதனை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். இந்த பாடலை கவுதம் மேனன் பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி அவரை பாடக் கேட்டார்கள். அப்போது அவர் என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் பாட முடியவில்லை. இதனால் இசை அமைப்பாளர் ஸ்டீவ் பாடி, அந்த பாடல் காட்சி படமாக்கவும் பட்டுவிட்டது.
இந்த நிலையில் கவுதம் மேனன் இப்போது நான் ஃப்ரீயாத்தான் இருக்கிறேன் வேணும்னா பாடித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். உடனே இசை அமைப்பாளர் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஒரே இரவில் பாடிக் கொடுத்திருக்கிறார் கவுதம் மேனன்.