சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அருந்ததியில் அதிரடி வேடத்தில் நடித்த அனுஷ்காவுக்கு அதன்பிறகு அவரது திறமைக்கு தீனி போடும் வேடங்கள் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி போன்ற படங்கள் அவருக்கு பெருந்தீனி போட்டுள்ளன. ஆக்சன் நடிகர்களுக்கு இணையாக உடம்பை வளைத்து நெளித்து வாள் ஏந்தி அவர் சண்டை போட்டு நடித்திருப்பது தென்னிந்திய நடிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
அந்த அளவுக்கு உடலை வருத்தி நடித்திருக்கும் அனுஷ்கா, அடுத்தபடியாக தமிழ்,தெலுங்கில் உருவாகும் கோடி ராமகிருஷ்ணாவின் பாபா சத்யசாய் என்ற படத்தில் பாபாவின் பக்தையாக நடிக்கிறார். இதற்காக பக்கா ஆன்மீகவாதியாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார் அவர்.
இதையடுத்து, ஆர்யாவுடன் அவர் ஜோடி சேரும் சைஸ் ஸீரோ என்ற படமும் அனுஷ்காவை மையப்படுத்திதான் தயாராகிறது. இந்த படம் பெண்களின் உடல் அமைப்பை மையக்கருவாகக் கொண்டு உருவாவதால், ஹீரோக்கள் உடல் எடையை குறைத்து அதிகப்படுத்தி நடிப்பது போல் அனுஷ்காவும் உடல் எடையை கூட்டி குறைத்து நடிக்கிறார்.
ஆக, இந்த இரண்டு படங்களுமே அனுஷ்காவின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.