சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான படம் லிங்கா. இந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக நஷ்டஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் கொடிபிடித்து வருகின்றனர். அதனால் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால், லிங்காவில் அவர் நடித்து வந்தபோது ஷங்கர், கே.வி.ஆனந்த், ராஜமவுலி ஆகியோரில் ஒருவர் இயக்கத்தில் அடுத்து ரஜினி நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், பின்னர் ரஜினியை தான் இயக்குவதற்கான முயற்சி செய்யவில்லை என்று கே.வி.ஆனந்த் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் ராஜமவுலி ஒரு சிறந்த இயக்குனர் என்று அவரது பாகுபாலி செட்டுக்கு சென்று வந்த ரஜினி கூறியதை அடுத்து அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது பாகுபாலியைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை தான் இயக்கப்போவதாக தற்போது ராஜமவுலி அறிவித்துள்ளார்.