சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு படத்தை அடுத்து நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள படங்களில் நடித்தார் விஷால். இந்த படங்கள் வெற்றி பெற்றன என்றபோதும், பாண்டியநாடு அளவுக்கு மெகா ஹிட்டாகவில்லை. இந்த நிலையில், அடுத்தபடியாக மீண்டும் சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஷால். கடந்த சில மாதங்களாக ஏற்கனவே தான் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படம் போன்று ஒரு சிறிய படத்தை இயக்கி வந்த சுசீந்திரன் தற்போது அந்த பட வேலைகளை முடித்து விட்டாராம்.
அதனால், தற்போது விஷாலும் தன்னை தயார்படுத்திக்கொண்டிருப்பதால் மீண்டும் விஷாலுடன் கைகோர்க்க தயாராகி விட்டார் சுசீந்திரன். வருகிற மார்ச் 3-ந்தேதி முதல் இவர்கள் இணையும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. இந்த படத்தை வேந்தர் மூவீஸ் தயாரிக்கிறது.