அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

லிங்கா படத்தை வாங்கி நஷ்டமடைந்ததாகச் சொல்லி பிரச்சனையை எழுப்பினார்கள் சில விநியோகஸ்தர்கள். அந்த விவகாரத்தில் தாங்கள் கேட்ட நஷ்டஈட்டுத்தொகை 33 கோடி கிடைக்காத ஆத்திரத்தில் ரஜினியை எதிர்த்து உண்ணாவிரதம், கடுமையான வார்த்தைகளால் பேட்டிகள், உச்சகட்டமாக ரஜினி வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் என அவரை பல வழிகளில் அசிங்கப்படுத்தினர்.
லிங்கா பிரச்சினையில் ரஜினியை கடுமையானமுறையில் அசிங்கப்படுத்தி வந்த சில விநியோகஸ்தர்களுக்குப் பின்னால் விஜய் தரப்பு இருப்பதாக படத்துறையில் ஒரு தகவல் அடிபட்டது. இந்த குற்றச்சாட்டு பற்றி விஜய் எந்த மறுப்பும் சொல்லவில்லை. லிங்கா படம் சம்பந்தமாக இப்படியொரு விசயம் நடப்பதே விஜய்க்கு தெரியாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அவரை தேவையில்லாமல் இந்த பிரச்சினைக்குள் இழுக்க வேண்டாம் என்று கூறினார் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர்.
இந்நிலையில் அசிங்கப்படுத்திய விநியோகஸ்தர்களை அழைத்து அவர்களுக்கு விஜய் பிரியாணி விருந்து கொடுத்த விவகாரம் ரஜினி தரப்பை மட்டுமல்ல தயாரிப்பாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கடந்த சில வாரத்துக்கு முன் மீடியாக்களை சந்தித்தபோது, எங்களுக்கு நஷ்டஈடு தர ரஜினி தயாராக இருக்கிறார். ஆனால், நஷ்ட ஈடு கொடுக்காதீர்கள். நீங்கள் கொடுத்தால் நாங்களும் கொடுக்க வேண்டும் என்று இரண்டு நடிகர்கள் தடுக்கிறார்கள் என்று லிங்கா விநியோகஸ்தர்கள் ஒரு குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் விஜய்யின் பெயர் அடிபட்டது. எனவே அவர்களை அழைத்து, "உங்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டாமென்று நான் சொல்லவே இல்லை" என்று தன்னிலை விளக்கம் அளித்த விஜய், அடுத்து பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார். தன்னிச்சையாக செயல்பட்ட லிங்கா விநியோகஸ்தர்களுக்கு எதிர்காலத்தில் யாரும் படங்களை விற்கக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருக்கிறது.
விஜய்யோ, புலி படத்தின் திருச்சி வினியோக உரிமையை லிங்கா விநியோகஸ்தர்களுக்குக் கொடுக்க முன்வந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்படி விலையைக் குறைத்துக் கொடுக்கும்படி சொல்லி இருக்கிறார் விஜய். அவரது இந்த செயலுக்கு திரையுலகில் எதிர்ப்பு எழுந்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் இது பற்றி விவாதிக்க உள்ளதாக தகவல்.