சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ரஜினி நடித்த லிங்கா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதை உடனே ரஜினி பைசல் பண்ண வேண்டும். இல்லையேல் அவரது வீட்டு முன்பு மெகா பிச்சை போராட்டம் நடத்துவோம். அதையடுத்து அவர் படங்களுக்கு தியேட்டர்களில் ரெட் கார்டு போடுவோம் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாபா, குசேலன் படங்கள் நஷ்டமடைந்தபோது ரஜினியே முன்வந்து உதவி செய்தார். இது அவரது மனிதாபிமானத்தை காட்டுகிறது. அதனால் அதையே பிடித்துக்கொண்டு தொடர்ந்து அவரிடம் நஷ்டஈடு கேட்பது நியாயமல்ல என்று இயக்குனர் சங்கத்தலைவர் விக்ரமன் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.
அவரைத் தொடர்ந்து இப்போது தயாரிப்பாளர் சங்கமும் விநியோகஸ்தர்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு, முறைப்படி எங்கு பேச வேண்டுமோ அங்குதான் அவர்கள் பேசியிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவர்களாக தேவையில்லாத போராட்டங்களில் ஈடுபடுவது ரஜினியின் பெயரை கெடுக்க வேண்டும் என்று சதி செய்வது போலவே உள்ளது என்று கூறியுள்ளனர்.