மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த கேரள அமைச்சர் |
முரளி நடித்த பாலம் படத்தை இயக்கிய கார்வண்ணன் காலமானார். அவருக்கு வயது 58. பாக்யராஜ் நடித்த ஞானப்பழம் படத்தில், அவரது அரசியல்வாதி அப்பாவாக நடித்தவர் கார்வண்ணன். தொண்டன், புதிய காற்று உள்ளிட்ட சில படங்களை தயாரித்தும், முரளி நடித்த பாலம் என்ற படத்தை இயக்கியும் உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்வண்ணன், சிகிச்சை பலனின்றி இறந்தார். கார்வண்ணனின் உடல் மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டது. பின்னர் மாலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.