சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அமீர் இயக்கிய ஆதிபகவன் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தவர் நீது சந்திரா. அந்தப் படம் மட்டும் வெற்றியடைந்திருந்தால்...நீது இன்னேரம் அனுஷ்கா, காஜல் அகர்வால், சமந்தா ரேன்ஜுக்கு இருந்திருப்பார். ஆதிபகவன் படத்தின் படு தோல்வி நீது சந்திராவின் கேரியரையே காலி பண்ணிவிட்டது. அமீரின் பேச்சைக்கேட்டு ஆதிபகவன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது வேறு படத்தில் நடிக்காமல் இருந்தார். அதுவே பிறகு அவருக்கு வினையாகிப்போய்விட்டது.
ஆதிபகவன் படத்தை நம்பி மற்ற படங்களில் நடிக்காமல் இருந்த நீது சந்திரா, கலைநிகழ்ச்சிகளில் நடனம் ஆடி செமத்தியாய் காசு பார்த்தார். ஒரு நிகழ்ச்சியில் ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு 15 லட்சம் வாங்கினார். இன்றைக்கு அவருக்கு ஒரு லட்சம் கொடுக்கக் கூட ஆள் இல்லை. அதுமட்டுமல்ல, முன்னணி ஹீரோக்கள் படங்களில் நமக்கு இனி வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்ற யதார்த்தத்தையும் புரிந்து கொண்டுவிட்டார்.
அதனால்தான், வைகை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் ஆர்.கே.வுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார். ஏன் இப்படி என்ற கேட்டால்... வைகை எக்ஸ்பிரஸ் படத்தில எனக்கு சூப்பர் கேரக்டர். அதுமட்டுமல்ல, அந்தப்படத்தில் எனக்கு டூயல்ரோல் என்று சமாளிக்கிறார். நீதுவுக்கு தெரியுமோ தெரியாதோ.. வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நீது சந்திரா மட்டும் கதாநாயகி இல்லை, இனியா, சுஜா வாருண்ணி, கோமல் சர்மா என வேறு சில நடிகைகளும் நடிக்கிறார்கள்.
இந்த நடிகைங்களே இப்படித்தான்.. எளிதில் ஏமாந்துவிடுவார்கள்.