சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
எஸ்.ஜே.சூர்யா தயாரித்து, இயக்கி, இசை அமைத்து, நடித்துள்ள படம் - இசை. சுமார் மூன்று ஆண்டு காலத்துக்கு மேலாக தயாரிப்பில் இருந்ததோடு, கடும் உழைப்பில் எஸ்.ஜே.சூர்யா உருவாக்கியுள்ள இப்படம் இம்மாதம் 30-ஆம் தேதி ரிலீசாகிறது. இரண்டு பிரபல இசை அமைப்பாளர்களுக்கிடையில் நடக்கும் ஈகோ பிரச்சினைகளை மையமகாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. அந்த இரண்டு இசை அமைப்பாளர்களாக எஸ்.ஜே.சூர்யாவும், சத்யராஜும் நடித்துள்ளனர். இசை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக சாவித்திரி என்ற புதுமுகம் நடித்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இசை படத்தை கடந்த வருடமே வெளியிட திட்டமிட்டிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. பல பெரிய படங்களின் வருகையினால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தவர், தற்போது வருகிற 30-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார். இம்மாதம் 29-ஆம் தேதி அஜித்தின் என்னை அறிந்தால் படம் வெளியாக இருந்ததால் எஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்தை மீண்டும் தள்ளி வைக்கும் சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் ஒரு சில காரணங்களால் என்னை அறிந்தால் படத்தின் வெளியீட்டு அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இது எஸ்.ஜே.சூர்யாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. எனவே படு உற்சாகமாக தனது இசை படத்தை 30-ஆம் தேதி வெளியிடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. உலகம் முழுக்க 300 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகிறது - இசை. எஸ்.ஜே.சூர்யா இழந்த மார்க்கெட்டை இசை மீட்டுத்தருமா? பார்ப்போம்!