சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
த்ரிஷா - வருண் மணியன் நிச்சயதார்த்தம் இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. நேற்று சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் திரையுலகினருக்கு புதிய ஜோடி 'பார்ட்டி'யும் கொடுத்து விட்டார்கள். தென்னிந்தியத் திரையுலகின் பல பிரபலங்கள் அதில் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களின் திருமணம் நீண்ட நாட்களுக்குத் தள்ளிப் போடப்படாமல் விரைவிலேயே நடந்து விடும் என்றும் தெரிகிறது.
த்ரிஷா தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக 'லயன்' படத்திலும் தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக 'அப்பாடக்கர்' ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஏற்கெனவே அவர் ஜெயம் ரவி ஜோடியாக நடித்துள்ள 'பூலோகம்' திரைப்படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. விரைவில் அஜித் ஜோடியாக நடித்துள்ள 'என்னை அறிந்தால்' திரைப்படம் வெளிவர உள்ளது. திருமணத்திற்குப் பிறகு த்ரிஷா சினிமாவை விட்டு விலக மாட்டேன், தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால், அவரைத் தேடி வேறு எந்த புதுப்படங்களும் வரவில்லை என்று தெரிகிறது.