சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் ஜீவா, தனது 31வது பிறந்தநாளை, ரசிகர்களோடு கொண்டாடினார்.
1997ம் ஆண்டு வெளிவந்த சூரியவம்சம் படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் ஜீவா, 2003ம் ஆண்டில் வெளியான ஆசை ஆசையாய், படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். பல படங்களில் சிறப்புத் தோற்றங்களிலும் ஜீவா நடித்து வந்தார். 20க்கும் மேற்பட்ட படங்களில் ஜீவா நடித்திருந்தபோதிலும், ராம், கற்றது தமிழ், டிஸ்யூம் உள்ளிட்ட படங்கள், அவரின் நடிப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கின. பின் வெளிவந்த சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்கள் இளைஞர்களை கவரும்வகையில் இருந்தன.
ஜீவா, தனது பிறந்தநாளை இன்று (ஜனவரி 04ம்தேதி) ரசிகர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.