சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கீழக்கரை: பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா - சப்ரூன் திருமணம் நேற்றிரவு கீழக்கரையில் நடந்தது. இது யுவனின் 3வது திருமணம் ஆகும். திருமணத்திற்காக முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ள யுவன் சங்கர் ராஜா தனது பெயரை அப்துல் ஹாலிக் மாற்றியுள்ளார்.
தமிழ் திரையுலகில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. இசை ஞானி இளையராஜாவின் வாரிசான அவர், தொடர்ந்து படிப்படியாக முன்னேறி முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். சமீபத்தில் தனது 100 வது படமான பிரியாணி படத்திற்கு இசையமைத்தார்.
யுவன் கடந்த 2005ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவை காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண பந்தம் மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2008ம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு ஷில்பா என்பவரை யுவன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களது திருமணமும் நீடிக்கவில்லை.
இல்லற வாழ்வு சரியாக அமையாக சோகத்தில் இருந்த யுவனுக்கு அவரது அம்மாவின் மரணம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியது. இந்நிலையில், யுவன் சங்கர் திடீரென தான் முஸ்லிம் மதத்தை பின்பற்றுவதாக தெரிவித்தார். இதனிடையே, யுவன் சங்கர் ராஜாவுக்கும், துபாயைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணான சப்ரூனுக்கும் திருமணம் நிச்சயமானது. மணமகள் சப்ரூன் துபாயில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார்.
இவர்களது திருமணம் கீழக்கரையில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள செங்கழுநீர்ஓடை என்னும் கிராமத்தில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடற்கரையோர தென்னந்தோப்பில் நேற்று இரவு 9.20 மணி முதல் 10.20 மணிக்குள் நடந்தது. இத்திருமணத்தில் மிக முக்கியமான உள்ளூர் பிரமுகர்கள், ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். அவசரகோலத்தில் நடைபெறும் திருமணத்தை போல் இருந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பாகவே சகல வசதிகளுடன் கூடிய தோப்பு பங்களாவில் யுவன் முகாமிட்டிருந்தார். இவ்விஷயம் மெதுவாகத்தான் உள்ளூர் மக்களுக்கு தெரிந்துள்ளது. யுவன்சங்கர்ராஜா முஸ்லிம் மதத்திற்கு மாறியவுடன் தனது பெயரை அப்துல் ஹாலிக் என பெயர் மாற்றம் செய்துள்ளார்.
இந்த திருமணத்தில் இளைய ராஜா கலந்து கொள்ளவில்லை. எனினும், யுவனின் சகோதரியான பவதாரணி அவரது கணவர் சபரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.