சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இயக்குனர் கே.பாக்யராஜ் இதுவரை பிராமணர் கேரக்டரில் நடித்ததில்லை. இது நம்ம ஆளு படத்தில் பிராமண பெண்ணை திருமணம் செய்வதற்காக பிராமண வேஷம் போடுவார். முதன் முறையாக அய்யனார் வீதி என்ற படத்தில் சுப்பிரமணிய சாஸ்திரி என்ற ஆச்சாரமான அய்யராக நடிக்கிறார்.
இதுபற்றி அந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஜிப்ஸி கூறியதாது: அய்யனார் வீதி என்பது ராஜபாளையம் அருகில் உள்ள ஒரு கிராமம். அந்த கிராமத்தில் ஒரு பெரிய பிரச்னை வருகிறது. அதனை அகிம்சை வழியில் தீர்க்கலாம் என்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரிகள். ஆயுத வழியில்தான் தீர்க்க முடியும் என்கிறார் அய்யனார். இருவரில் யார் வழி வெற்றிபெறுகிறது என்கிற கதை. சுப்பிரமணிய சாஸ்திரிகள் கேரக்டரில் கே.பாக்யராஜ் நடித்திருக்கிறார். இதுவரை நான் நடிக்காத கேரக்டர் என்று சொல்லியே அவர் நடிக்க சம்மதித்தார். அய்யனாராக பொன்வண்ணன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் முக்கிய கேரக்டர்.
இதுதவிர சாட்டை யுவன், சரா ரெட்டி, சிஞ்சு மோன் ஆகிய இளம் நடிகர் நடிகைகள் நடிக்கிறாகள். ஒரு கிராமத்தின் பிரச்சினை மூலம் உலகம் முழுக்க இருக்கம் ஒரு பிரச்சினையை பேசுகிற படம். என்கிறார் ராஜ்குமார் ஜிப்ஸி.