சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சிறிய இடைவௌிக்கு பிறகு மாதவன் நடித்து வரும், ''இறுதிச் சுற்று'' படத்தின் பர்ஸ்ட் லுக்கு போஸ்டர் வௌியிடப்பட்டுள்ளது. ''அலைபாயுதே'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். அதன் பின்னர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர், தமிழ் சினிமாவின் முன்ணி நடிகராக உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி, இந்தி, ஆங்கில சினிமாவிலும் பிரபலமானவராக இருக்கிறார் மாதவன். தமிழில் கடைசியாக 'வேட்டை' படத்தில் நடித்தார். இந்நிலையில் சிறிய இடைவௌிக்கு பிறகு இப்போது இறுதிச் சுற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். மாதவன் உடன் ரித்திகா சிங், மும்தாஜ் சர்கார், நாசர், ராதாரவி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் இந்தியிலும் சாலா கடூஸ் என்ற பெயரில் வௌியாக இருக்கிறது.
மணிரத்னத்தின் உதவியாளராக இருந்த சுதாகோங்கரா, இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடிக்கிறார். இதற்காக சில மாதங்களாக உடற்பயிற்சி செய்து உடலை பாடிபில்டர் போன்று மெருகேற்றியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வௌியாகியுள்ளது. இதில் மாதவன் அடர்ந்த முடி, தாடி, மீசையுடன் ஆக்ரோஷமாக காணப்படுகிறார்.