சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் சினிமாவின் பழம்பெரும் ஒளிப்பதிவாளர் என்.பாலகிருஷ்ணன் காலமானர் அவருக்கு வயது 84. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மகன் வீட்டில் வசித்து வந்த அவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை மோசமாக இருந்தது. அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று (டிச 11) மரணம் அடைந்தார். அவருக்கு ராதா என்ற மனைவியும், ராஜேந்திரன் என்ற மகனும், ஸ்ரீலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
மறைந்த கே.என்.பாலகிருஷ்ணன் கே.பாலச்சந்தரின் இருகோடுகள், எதிர் நீச்சல், அரங்கேற்றம், சிவாஜி நடித்த சிவந்தமண், நெஞ்சிருக்கும் வரை, எம்.ஜி.ஆர் நடித்த உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன், ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் விசுவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருந்தார். 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.