காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் |
பழம்பெரும் தெலுங்கு நடிகர் காந்தா ராவ் (86) ஐதராபாத்தில் காலமானார். சில ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்ட காந்தா ராவ், அதற்காக வீட்டிலிருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் உடல்நிலை மோசமானதால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (22ம்தேதி) காலமானார்.
நடிகர் காந்தா ராவ் தெலுங்கில் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆந்திர மாநிலம் குடிபந்தா என்ற கிராமத்தில் 1923ம் ஆண்டு பிறந்த இவர், 1951ம் ஆண்டு "நிர்தோஷி' என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அவர் நடித்த பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆரைப் போல வாள் சண்டை போடுவார். இதனால் ஆந்திர எம்.ஜி.ஆர். என்று ரசிகர்கள் அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.