சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திற்கு பிறகு ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் இசை அமைக்கிறார். ஆர்யாவின் ஷோ பீப்பிள் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்திற்கு விஎஸ்ஓபி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விஎஸ்ஓபி என்றால் சரக்கு பெயர்தான் நினைவுக்கு வரும் ஆனால் விசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க" என்பதுதான் தலைப்பு. இதன் முதல் எழுத்துக்களை சேர்த்தால் விஎஸ்ஓபி என்று வரும். ஒரு கல் ஒரு கண்ணாடி ஓகேஓகே ஆன மாதிரி. இதில் ஆர்யா வாசுவாகவும், சந்தானம் சிவாகவும் நடிக்கிறார்கள்.