ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? |
கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் அவரது உதவியாளரான அஞ்சனா இயக்கத்தில் வெப்பம்' படம் 2011ம் ஆண்டுவெளிவந்தது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவர் தற்போது இயக்கி வரும் படத்திற்கு 'பல்'லாண்டுவாழ்க' என பெயர் வைத்திருக்கிறாராம். ஒரு பல் மருத்துவரின் காதலைப் பற்றிச் சொல்லும் கதை என்பதால் படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு வைத்திருக்கிறார்களாம்.'பல்லாண்டுவாழ்க' படம், எம். ஜி.ஆர். ரசிகர்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் ஒரு மறக்க முடியாத படம்.எம்ஜிஆர், லதா, எம்என்.நம்பியார், தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ்.மனோகர் போன்ற தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்கள் நடித்த இந்தப் படம் 1975ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்று 100 நாட்கள் ஓடிய படம்.
ஒரு சமூக சீர்திருத்தம் பற்றிய கதை கொண்ட அந்தப்படம், எம்ஜிஆர் நடித்த சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு படத்தின் தலைப்பை கிண்டலடிக்கும் விதத்தில் 'பல்'லாண்டுவாழ்க' என மீண்டும் ஒரு படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிருப்பதை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான். இந்தப் படம் பற்றிய செய்திகள் சில மீடியாக்களில் வெளிவந்துள்ளன. இந்தப்படத்தில், 'மாஸ்கோவின்காவிரி' படத்தில் நாயகனாக நடித்த ராகுல்ரவீந்திரன் நாயகனாகவும், 'காதல் சொல்ல ஆசை' படத்தில் நடித்த வாஸ்னா, நாயகியாகவும்நடிக்கிறார்கள்.