Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சி படங்களை அனுப்பி வாய்ப்பு தேடும் மீனாட்சி

21 நவ, 2014 - 02:51 IST
எழுத்தின் அளவு:

கொல்கத்தா பெண்ணான பிங்கி சர்க்கார் தெலுங்கு படங்களில் இருந்து தமிழ் படத்துக்கு வந்தார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் மீனாட்சியாக மாறினார். க.கு படம் நன்றாக ஓடினாலும் அதற்கு பிறகு அவர் நடித்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. மலையாளப் படத்திலும் நடித்து பார்த்தார் அங்கும் வெற்றி பெற முடியவில்லை. இதற்கிடையில் தந்தைக்கு உடல் நலமில்லாமல் போகவே அவர் பார்த்துக் கொண்டிருந்த பிசினஸ்களை பார்க்க சென்று விட்டார்.


ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தபோது ஒரு சுற்று பெருத்திருந்தார். அதனால் நினைத்தபடி வாய்ப்புகள் அமையவில்லை. இப்போது உடலை குறைத்து கவர்ச்சியாக போட்டோ செஷன் நடத்தி அதை தெரிந்த இயக்குனர், தயாரிப்பாளர், மீடியாக்களுக்கு அனுப்பி வாய்ப்பு தேடி வருகிறார். விடா முயற்சியின் பயனாக வில்லங்கம், சூதாடி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் வெள்ளக்கார துரை படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். எப்படியாவது ஹீரோயினாக விட்ட இடத்தை பிடித்து விடவேண்டும் என்று விடாது முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)