ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? |
அங்காடித்தெரு அஞ்சலி, சினேகா வரிசை நடிகையாக வேண்டியவர். ஆனால், சரியான கதைகள் கிடைக்காததால் அவரும் ஒரு கட்டத்தில் கவர்ச்சி நாயகியாக உருவெடுத்தார். குறிப்பாக, காமெடி கதை என்று சொல்லி சுந்தர்.சி அவரை களமிறக்கிய கலகலப்பு படத்தில் கவர்ச்சி நடிகைகளே மிரண்டு ஓடும் அளவுக்கு அஞ்சலியின் இடுபபு நடனம் படுபயங்கரமாக இருந்தது.
அதனால் அடுத்தடுத்து அஞ்சலியின் பிரவேசம் இன்னும் அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்த்த நேரம்தான், அவரது கேரியரில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. இருப்பினும், தற்போது தட்டுத்தடுமாறி, ஜெயம் ரவியின் அப்பாடக்கர் படம் மூலம் எழுந்து நிற்கிறார் அஞ்சலி. இதையடுத்து, பழைய ஞாபகத்தில் சில டைரக்டர்கள் அவரை மீண்டும் கவர்ச்சிக்கோதாவில் இறக்கிவிடும் நோக்கத்துடன் அணுகியபோது, அதற்கு மறுத்து விட்டாராம்.