சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அட்டகத்தி படத்தில் நடித்த தினேஷ் அதன்பிறகு குக்கூ படத்தில் நடித்தபோதுவரை மீடியாக்களோ, சினிமாத்துறையினரோ யார் தன்னை அலைபேசியல் தொடர்பு கொண்டாலும் உடனே அட்டன் பண்ணுவார். ஆனால் குக்கூ படத்தின் வெற்றிக்கு பிறகு மீடியாக்கள், சினிமாக்காரர்களை விட்டு விலகியே நிற்கிறார். அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்றொரு குற்றச்சாட்டு இருந்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், புத்தகம், அமரகாவியம் படங்களில் நடித்த ஆர்யாவின் தம்பி சத்யாவும், இப்போது தினேஷின் பட்டியலில் சேர்ந்துள்ளார். அவரை எப்போது யார் தொடர்பு கொண்டாலும், அவர் அட்டன் பண்ணுவதே இல்லை. இந்தநிலையில், அவரை வைத்து படம் இயக்கியுள்ள சிலரிடம் கேட்டபோது, மீடியாக்களை மட்டுமல்ல, அவரை வைத்து படம் பண்ணுபவர்களே அவரை அத்தனை எளிதில் தொடர்பு கொள்ள முடிவதில்லை. அதோடு படப்பிடிப்பு தளத்திற்கும் குறித்தபடி வரமாட்டார். சில முன்னணி ஹீரோக்கள் வருவது மாதிரி தாமதமாகத்தான் வருவார். நடித்த இரண்டு படங்களுமே ஓடவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர் காட்டும் அலட்சியம் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.