சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டாக்டர் பட்டம் பெறுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பல தடவை டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இத்தனை தடவை டாக்டர் பட்டம் பெற்ற பிறகும், தன் பெயருக்கு முன்னால் டாக்டர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று அவர் போட்டுக் கொண்டதே இல்லை. ஆனாலும் அவரைத்தேடி டாக்டர் பட்டங்கள் அணிவகுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் ஒரு டாக்டர் பட்டம் ஏ.ஆர்.ரஹ்மானைத்தேடி வந்திருக்கிறது.
பாஸ்டனிலுள்ள பெர்க்லீ காலேஜ் ஆஃப் மியூசிக் அவருக்கு ஒரு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. அதோடு இந்தியாவிலிருந்து இந்த கல்லூரிக்கு படிக்க வரும் மாணவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க உள்ளதாகவும் பெர்க்லீ காலேஜ் ஆஃப் மியூசிக் தெரிவித்துள்ளது. அக்டோபர் 24 அன்று பாஸ்டனிலுள்ள பெர்க்லீ காலேஜ் ஆஃப் மியூசிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் இணைந்து இசைக் கச்சேரி ஒன்றையும் நடத்தியுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். இசை நிகழ்ச்சி நடைபெற்றதும், விழாவின் நிறைவுப் பகுதியாக ஏ.ஆர். ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏற்புரையாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கம்போல் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று சொல்லத்தவறவில்லை.