பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய இரண்டு படங்களும் இந்த தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ளது. அதனால் அவர்கள்தான் இந்த தீபாவளியின் நேரடி போட்டியாளர்கள் என்று கடந்த சில மாதங்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையே விஷாலின் பூஜைக்கு எந்தவித பிரச்சினைகளும் எழவில்லை. ஆனால், விஜய்யின் கத்தி கடந்த சில மாதங்களாகவே சர்ச்சையில் சிக்கியது. படம் திரைக்கு வருவதற்கு முந்தைய நாள்கூட சென்னை சத்யம் தியேட்டரில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டு படம் திரைக்கு வருமா? வராதா? என்கிற பதட்டமான சூழ்நிலையெல்லாம் நிலவியது.
இருப்பினும் ஒருவழியாக லைகா நிறுவனத்தின் பெயரை நீக்கி படத்தை வெளியிட்டு விட்டனர். இந்த நிலையில், நேற்று சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு ப்ரிவியூ தியேட்டரில் விஜய்யின் கத்தியும், விஷாலின் பூஜையும் வெவ்வேறு தியேட்டர்களில் டெக்னீசியன்களுக்காக திரையிடப்பட்டிருந்தது. அப்போது கத்தி படம் பார்க்க விஜய் வந்தார்.
இந்த சேதியறிந்து பூஜை படம் பார்த்துக்கொண்டிருந்த விஷால் தியேட்டரை விட்டு வெளியே வந்து விஜய்யை வரவேற்றார். அதையடுத்து சிறிது நேரம் பேசிக்கொண்ட அவர்கள் இருவரும் படங்கள் வெற்றி பெற வாழ்த்து சொன்னபடி விடைபெற்றனர்.