சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அஜீத்துடன், அவரது 55வது படத்தில் நடித்து வரும் த்ரிஷா, அந்த படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிக்கிறார். அதோடு, இளவட்டமாக தோன்றும் அஜீத்துக்கு ஜோடி என்பதால் த்ரிஷாவையும் அதிக இளமையாக மாற்றியுள்ளார் கெளதம்மேனன். மேலும் படம் முழுக்க விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் புடவை அணிந்து நடித்தது போன்று இந்த படத்திலும் நடிக்கிறார். அந்த வகையில் அவரை புடவை தேவதையாக பளிச்சிட வைத்திரக்கிறாராம் கெளதம் மேனன்.
அதனால் பவர் கன்னட படத்தில் நடித்த பிறகு அங்கு இரண்டு புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வரும் த்ரிஷா, தமிழில் பூலோகத்தை முடித்து விட்டு தற்போது ஜெயம்ரவி நடிக்கும் அப்பா டக்கர் படத்திலும் நடிக்கிறார். இப்படி பரவலாக நடித்தபோதும், அஜீத் படம் எனக்கு ரொம்ப ஸ்பெசல் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் கேட்கிறபோதெல்லாம் கால்சீட் கொடுத்து நடித்து வருகிறார் த்ரிஷா.
இந்த நிலையில், அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றி அவரை கேட்டால், அவருடன் ஜீ, கிரீடம், மங்காத்தா படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறேன். அப்போது என்னிடம் எப்படி பழகினாரோ அப்படித்தான் இப்போதும் பழகி வருகிறார். முக்கியமாக தன்னுடன் நடிக்கும் அனைவருக்குமே படத்தில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நினைப்பார். இதற்கெல்லாம் மேலாக பெண்களை மதிக்கக்கூடிய நடிகர். அந்த வகையில், என்னைக்கேட்டால் பெண்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்த மாஸ் நடிகர் அஜீத்தான் என்பேன் என்கிறார் த்ரிஷா.