ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? |
இப்பொழுது ஒரு எழுத்தில் படத்துக்கு டைட்டில் வைப்பது பேஷனாகிவிட்டது. இதற்கு முன் உ, ப, தா, கோ, வா என ஒரு எழுத்துக்களில் பெயர் வைத்தார்கள். ஷங்கர் தன் படத்துக்கு ஐ என்று பெயர் வைத்ததும் அது இன்னும் அதிகமாகிவிட்டது. ழ, தி, ரூ ஆகிய ஒரு எழுத்துக்களில் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இப்போது புதியவர்கள் இணைந்து வி என்ற படத்தை எடுக்கிறார்கள். இதில் ராகவ், சத்யதாஸ், ரிஷி, திவ்யன், ரினீஷ், ருதியா, அஸ்வினி, நிமா, சூர்யா, பில்ஜியா, என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இளங்கோ, கலைவாணன் இசை அமைக்கிறார்கள், அணில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபேஷ்குமார் தயாரிக்கிறார்.
"படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று தனியாக யாரும் கிடையாது. 5 நண்பர்கள், தங்கள் காதலியுடன் ஒரு சுற்றுலா செல்கிறார்கள். கூடவே அவர்களது பெற்றோர்களும் செல்கிறார்கள். அந்த நெடுஞ்சாலை பயணத்தில் அவர்கள் சந்திக்கும் திகில் அனுபவங்கள்தான் படம். மற்ற திகில் படங்களிலிருந்து இது வித்தியாசமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் டாவன்சி.