சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கொச்சியைச் சேர்ந்த சலோன் சைமன், தமிழில் கள்வர்கள் என்ற படத்தில் நடித்தார். அப்போது சினிமாவில் ஈடுபாடு ஏற்பட்டு, சரத்குமாரை வைத்து நீ நான் நிழல் என்ற படத்தைத் தயாரித்தார். சமீபத்தில் வெளியான நீ நான் நிழல் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஏறக்குறைய நான்கு கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தார் சலோன் சைமன். நான்கு கோடி நஷ்டமடைந்தாலும், சினிமாவை அவர் விடுவதாக இல்லை. அடுத்து, ஒரே நாளில் கோடீஸ்வரனாவது எப்படி? என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.
தமிழில் கள்வர்கள் படத்தில் நடித்துள்ளதோடு மேலும் சில தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சைமன். பெரிய தொழிலதிபரான இவர், ஏராளமான தொண்டு நிறுவனங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிறைய உதவிகளை செய்து வருகிறார். சலோன் சைமனை சிறந்த மனிதாபிமானி என்று பாராட்டி அமெரிக்க பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் நடந்த இதற்கான விழாவில், நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், பி.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் சைமனுக்கு டாக்டர் பட்டம் வழங்கினார் பேராயர் டாக்டர் எஸ்.எம். ஜெயக்குமார். இந்த கௌரவ டாக்டர் பட்டம் அளித்தமைக்காக தனது நன்றியைத் தெரிவித்த சைமன், தொடர்ந்து தமிழில் நல்ல படங்களைத் தயாரிப்பேன் என்றும், நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.