சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
களஞ்சியத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வேலுதாஸ் ஞான சம்பந்தன் இயக்கும் படம் ஆக்கம். சதீஸ்வரன், வைதேகி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார், சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். "குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமானது. ஒரு மனிதன் தான் வாழும் சூழ்நிலைக்கேற்பவே தானும் வளர்கிறான்.
சென்னை ஒரு மனிதனை எப்படி வளர்க்கிறது என்பதுதான் படத்தின் கதை. அதனை காமெடி திரில்லர் பாணியில் சொல்கிறோம். இது எனது நண்பன் ஒருவன் வளர்ந்த விதமும், வாழ்ந்த விதமும் எப்படி இருந்தது என்கிற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. முழு படமும் சென்னை நகரைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. சென்னையின் இன்னொரு முகத்தை காட்டுகிற படமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் வேலுதாஸ் ஞானசம்பந்தன்.