அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |
விஜய் நடித்த கத்தி படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.
தீபாவளிக்கு வரவிருக்கும் கத்தி படத்தை வரவேற்கும் மனநிலையில் விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்க, அஜித்தின் ரசிகர்களோ தல படம் தீபாவளிக்கு வெளியாகாததினால் சோகமாக உள்ளனர்.
தல 55 படத்தின் தற்போதைய நிலைதான் என்ன?
ஒவ்வொரு காட்சியையும் பொறுமையாக, யோசித்து எடுப்பதுதான் கௌதம் மேனனின் வழக்கம்.
ஆனால், தற்போது அஜித்தை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் படத்தை வேகமாக எடுத்து வருகிறாராம். முன்கூட்டியே எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு வைத்திருப்பதால் வேகமாக எடுத்து வருகிறாராம் கௌதம் மேனன்.
வட இந்தியாவில் ராணுவ முகாம் உள்ள பகுதிகளில் தல 55 படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கி உள்ளனர்.
அங்கே படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது க்ளைமாக்ஸ் காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கி வருகிறார்கள். தல 55 படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதால் ஹைதராபாத் ஷெட்யூலோடு தல 55 படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் டான் மெக்கார்தர் படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்! என ட்வீட் செய்திருக்கிறார்.
சில பேட்ச்வொர்க் மட்டுமே படமாக்கப்படவிருக்கிறதாம்.
கௌதம் மேனன் ஏற்கெனவே அறிவித்தபடி இந்த மாத இறுதிக்குள் தல55 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் அனைத்தும் வெளியாகும் என தகவல் அடிபடுகிறது.