சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மைனாவுக்கு பிறகு பேசப்படும் இசையமைப்பாளராகி விட்டார் டி.இமான். இவர் இசையமைப்பாளராக காதலே சுவாசம் என்ற படத்தில் அறிமுகமானார். அதையடுத்து விஜய்யின் தமிழன் படத்திற்கும் இசையமைத்தார். ஆனால் அவர் இசையமைத்த படங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் பல வருடங்களாக போராடி வந்த இமானுக்கு, பிரபுசாலமனின் மைனாதான் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதிலிருநது அவர் இசையமைக்கிற எல்லா படத்தின் பாடல்களும் ஹிட்டாகி வருகிறது. அதோடு தனது பாடல்களை ஹிட்டாக்கும் முயற்சிகளில் அதிக ஈடுபாடு காட்டும் டி.இமான், நடிகர் நடிகைகளை பாட வைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஜில்லாவில் விஜய்யை பாட வைத்தவர், என்னமோ ஏதோ படத்தில் ஸ்ருதிஹாசனை பாட வைத்தார். வருத்தப்படாத வாலிபர் சஙகம் படத்தில் சிவகார்த்திகேயனை பாடவைத்தார். பாண்டியநாடு படத்தில் பை பை பை என்று லட்சுமிமேனனை பாட வைத்தார்.
இப்படி பல நடிகர் நடிகைகளை பாட வைத்துள்ள இமான், தற்போது ஜெயம்ரவி-ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்தில் பாலிவுட் இசையமைப்பாளர் விஷால் தத்லானி என்பவரை பின்னணி பாட வைத்திருக்கிறார். தனது இசையில் நடிகர் நடிகைகள் பாடினால் உடனே அவர்களுடன் நின்று போட்டோ எடுத்து அதை பப்ளிசிட்டிக்கு அனுப்பி விடும் டி.இமான், விஷால் தத்லானியுடனும் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.