சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பல கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள, 'ஐ' படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. ஹாலிவுட் நடிகர் அர்னால்டை இந்த விழாவுக்கு அழைத்து வந்தது, பாலிவுட்காரர்களை வாய் பிளக்க வைத்து விட்டது. இதனால், இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும்' என்பது தான், தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இதுகுறித்து விசாரித்தபோது, மாடலிங் உலகை மையமாக வைத்துத் தான், இந்த படத்தின் கதை புனையப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாடலிங் உலகில் உள்ளவர்களின் உழைப்பு, அவர்கள் படும் வேதனைதான், 'ஐ' படத்தின் மையப் புள்ளியாம். இதனால், கதைக்கேற்ற வகையில், தன்னை உருமாற்றி, உடலை வருத்தி, கடுமையாக உழைத்து நடித்துள்ளாராம், விக்ரம்.