சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ்த் திரையுலகமே இன்று வெளியாகும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், தெலுங்குத் திரையுலகம் 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படத்தின் இசை வெளியீட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரான கிருஷ்ண வம்சி இயக்கத்தில், தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், கமலினி முகர்ஜி, ஜெயசுதா, மற்றும் பலர் நடிக்கத் தயாராகி வரும் படம் அது. இப்படத்தின் இசை வெளியீடு இன்று ஐதராபாத்தில் நடக்க உள்ளது.
கிருஷ்ண வம்சி இயக்கத்தில் இதுவரை பல வித்தியாசமான படங்கள் வெளிவந்துள்ளன. அவர் இயக்கிய 'அந்தப்புரம்' படம் தமிழிலும் வெளியாகியது. மகேஷ் பாபு உட்பட பல நட்சத்திரங்களை அவர் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசை. 'அந்தப்புரம்' படத்திற்கும் யுவனின் அப்பாவான இளையராஜாதான் இசையமைத்திருந்தார். கிருஷ்ணவம்சி இளையராஜாவை அதிகம் நேசிக்கும் இயக்குனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படத்தின் டீஸரும் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகமாகியுள்ளது. 'மகதீரா' படத்தின் வெற்றி ஜோடியான ராம் சரண் தேஜா, காஜல் அகவர்வால் மீண்டும் இணைந்துள்ளதாலும் பல வெற்றிகரமான கூட்டணி இந்தப் படத்தில் உள்ளதாலும் தெலுங்குத் திரையுலகில் முதலில் 100 கோடி வசூலிக்கப் போகும் படமாக இப்படம் அமையும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.